ஐரோப்பா முழுவதும் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், போலந்தில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் முதல் விமானம் இன்று (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
186 பேர் கொண்ட இந்த சுற்றுலாப் பயணிகள் குழு போலந்து – வார்சா நகரிலிருந்து என்டன் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான ENT 1561 என்ற சிறப்பு விமானத்தில் இந்த நாட்டிற்கு வந்துள்ளனர்.
போலந்து சுற்றுலாப் பயணிகள் குளிர்காலத்தில் இலங்கைக்கு வருவது இது 13வது முறையாகும். இந்த ஆண்டு நவம்பர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை போலந்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர உள்ளனர்.
அனுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா, போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇