எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில் , தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை, மொனராகலை மற்றும் கேகாலை ஆகிய தேர்தல் தொகுதிகளின் ஒருபக்கத்தில் மாத்திரம் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும் நாட்டின் ஏனைய தொகுதிகளில் வாக்குச் சீட்டுகள் இரண்டு பக்கங்களில் அச்சிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்கினை அளிக்கலாம் என்பதுடன், அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவிற்கு அளிக்க முடியும்.
வாக்களிக்கும் போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பெயர் மற்றும் சின்னத்திற்கு முன்னால் உள்ள வெற்று பெட்டியில் புள்ளடியிட வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் 3 பேருக்கு மாத்திரம் விருப்பு வாக்கினை அளிக்க முடியும்.
அதற்காக வாக்குச்சீட்டில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள விருப்பு இலக்கத்திற்கு புள்ளடியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇