இலங்கையில் பகுதிச் சந்திர கிரகணத்தை அவதானிக்க முடியும் – ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இவ் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணத்தை இன்று (03.03.2026) இலங்கையில் அவதானிக்க முடியும் என ஆர்தர் சி. கிளார்க் (Arthur C. Clarke) நிறுவனத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இது ஒரு முழுச் சந்திர கிரகணமாக இருந்தபோதிலும், சந்திரன் அடிவானத்திற்கு (Horizon) கீழே அமைந்திருப்பதால், இலங்கையர்களுக்கு இது ஒரு பகுதிச் சந்திர கிரகணமாகவே காட்சியளிக்கும்.

இன்று மாலை 18:21 (6:21 PM) மணியளவில் சந்திரன் கிழக்கு அடிவானத்தில் உதிக்கும் போது, நிலவின் ஒரு பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்பட்டிருப்பதை மக்கள் அவதானிக்கலாம்.

மேகமூட்டமற்ற தெளிவான வானம் இருக்கும் பட்சத்தில், கிழக்கு அடிவானம் நன்கு தெரியக்கூடிய உயரமான அல்லது திறந்தவெளியில் இருந்து இதனைத் தெளிவாகப் பார்க்க முடியும் என ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects