மட்டக்களப்பு மாவட்டத்தில் தரமான ஊடக அறிவு தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சிப்பட்டறை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, அரச தகவல் திணைக்களத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (04.06.2026) காலை 8.30 மணி முதல் தரமான ஊடக அறிவு தொடர்பாக ஊடக பாடத்தினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தெளிவூட்டல் பயிற்சிப்பட்டறை நடைபெற்று வருகின்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்தினால் குறித்த பயிற்சிப்பட்டறை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாவட்ட ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செயலமர்வில் திறமை மிகு வளவாளர்கள் வளவாண்மை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects