ஓகஸ்ட் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 3,690 ரூபாயுக்கு விற்பனை செய்யப்படுகிறது
5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 1,482 ரூபாயுக்கும் 2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 694 ரூபாயுக்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது
அதேபோன்று ஆகஸ்ட் மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் இல்லை என லாஃப்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இறுதியாக லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் விலை ரூ. 4,115க்கு விற்பனை செய்யப்படும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










