களுத்துறை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் திருத்தப்பணிகள் காரணமாக 12 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த நீர்வெட்டு நாளை (05.08.2025) காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு , நாகொடை, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, வாதுவை ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










