அக்ஷன் யுனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தினால் நியூசிலாந்து நாட்டின் வர்த்தக அமைச்சு மற்றும் Child Fund நியூசிலாந்து ஆகியவற்றின் நிதி அனுசரணையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் அமுல்படுத்தப்பட்டுள்ள Community – Led Climate Adaptation for Island Resilience (CCAIR) திட்டத்தின் ஊடாக அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட முறுத்தானை கிராம சேவகர் பிரிவில் உள்ள 288 குடும்பங்களுக்கு பிரதேச செயலக சிபாரிசுடன் உலர் உணவுப் பொதிகள் 30.11.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டது.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பாதைகளூடாக AU Lanka நிறுவன ஊழியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் இராணுவ சிப்பாய்களின் உதவிகளுடன் இப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










