இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதத்தை டிஜிட்டல் பொருளாதார மாதமாக அறிவிப்பதற்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், டிஜிட்டல் பொருளாதாரத்தின் நன்மைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், டிஜிட்டல் பொருளாதார கொள்கை மற்றும் அதன் செயன்முறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










