மட்/ இந்துக்கல்லூரி பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் பகி மற்றும் பயிற்றுவிப்பாளர் அருள்பிரகாசத்தின் வேண்டுகோளுக்கிணங்க குளோபல் KSCயின் அனுசரணையில் புதிய கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் முதல் கட்டமாக பாடசாலைக்கு தேவையான ரூபா 150,000/= பெறுமதியான ஒரு சில விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 04.08.2025 அன்று பாடசாலையில் நடைபெற்றது.
குறித்த விளையாட்டுப்பொருட்களை புதிய கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தினர் பாடசாலை அதிபர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கையளித்தனர்.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் பகீரதன், உடற்கல்வி ஆசிரியர் பகி, விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் அருள்பிரகாசம் , பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், புதிய கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










