தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களுக்குத் தடை தொடர்பில் வெளியான செய்தி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், வினாத்தாள் விநியோகம், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் ஆகியவற்றுக்கு இன்று (06.08.2025) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். 

இந்த விதிகளை மீறும் வகையில் யாரேனும் செயற்பட்டால், இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பரீட்சை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை பரீட்சார்த்திகள் அனைவரும் காலை 8.30 மணிக்குள் பரீட்சை அறைகளுக்குச் செல்ல வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு, 231,638 சிங்கள மொழி பரீட்சார்த்திகளும் 76,313 தமிழ் மொழி பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 307,959 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர்.

அத்தோடு ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிபிடத்தக்கது.

இந்த உத்தரவுகளை மீறி எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ செயல்பட்டால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கோ அல்லது பாடசாலை பரீட்சை அமைப்பு, முடிவுகள் கிளையிலோ 0112 784208 அல்லது 0112 784537 என்ற எண்களுக்கு அழைத்து முறையிடவும் முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects