சீனாவில் மனித உருவ ‘ரோபோ’ ஒன்று, அந்நாட்டின் பாரம்பரிய கலையான நாட்டியம் மற்றும் நாடகத் துறையில் கலாநிதி பட்டம் பெறுவதற்கான, பிஎச்.டி (PhD) கற்கை நெறியில் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஐ.(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகில் வேகமாக வளர்ந்து வருகிறது.
அதிலும் ரோபோக்களை உருவாக்கி அதில், ஏ.ஐ.(AI) தொழில்நுட்பத்தைப் புகுத்தி, கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள், விடுதிகள் என பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில், சீனாவின் ஷாங்காய் தியேட்டர் அகாடமியில், மனித உருவிலான ரோபோ ஒன்று, அந்த நாட்டின் பாரம்பரிய நாட்டியம் மற்றும் நாடகத் துறையில் கலாநிதி பட்டம் பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஐ (AI) , கலைஞர் என்று வர்ணிக்கப்படும், ‘எக்ஸ்யூபா -01’ (Xueba 01) என்ற அந்த ரோபோ, ஆணின் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற ஷாங்காய் (Shanghai) கலைஞரான பேராசிரியர் யாங் கிங்கிங்கின் (Professor Yang Qingqing) வழிகாட்டுதலின் கீழ், செப்டம்பர் 14 இல் இந்த ரோபோ தன் கல்விப் பயணத்தை ஆரம்பிக்கிறது.
மேடை நிகழ்ச்சி, திரைக்கதை எழுதுதல், மொழி உருவாக்கம் உட்பட பல்வேறு பாடத் திட்டங்களை இந்த ரோபோ கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










