மட்டக்களப்பு மாநகர சபையினால் கடந்த வருட நிலுவைகளை அறவிடும் பணிகள் முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இன்று (06.08.2025) ஆரம்பமாகியது.
கடந்த வருடங்களில் மாநகர சபையின் 20 வட்டாரங்களில் செலுத்த வேண்டிய வரிப்பணம் 90 மில்லியன் நிலுவையுள்ளதனால் அவற்றை மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஐந்து குழுவாக பிரித்து அறவிடுகின்றனர்.
மேலும் கடந்த வருடங்களான 2022, 2023, 2024 ஆண்டுகளில் மட்டும் 62 மில்லியன் நிலுவை அறவிடாது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மக்களின் வசதிகருதி மக்கள் வீடுகளுக்கு சென்று நிலுவைகளை அறவிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தற்போது மாநகர சபையினால் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், திண்மக்கழிவு முகாமைத்துவம், வீதி அமைத்தல், மின் விளக்குகளை பொருத்துதல், சேதமடைந்த வீதிகளை செப்பணிடுதல் போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் மாநகரசபை எல்லைப்பகுதியினுள் கட்டாக்காளி மாடுகளின் நடமாட்டத்தை தவிர்ப்பதற்கு மாடுகளை வளர்ப்பவர்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மேலும் வீதியோர வியாபாரத்தினை தடுப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றார்.
இந் நிகழ்வில் பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார், மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன், கணக்காளர்கள், நிருவாக உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










