2028 ஆம் ஆண்டு, அமெரிக்காவின், லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகுவதற்காக டொனால்ட் ட்ரம்ப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளார்.
இக் குழுவின் பணி என்ன என்பதை, முழுமையாக வெள்ளை மாளிகை இதுவரை வெளியிடவில்லை.
2028 இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியானது, பாதுகாப்பான, தடையில்லாத, வரலாற்று வெற்றி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், லொஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக், அமெரிக்காவிற்கு ஒரு அற்புதமான தருணமாக உருவாகி வருவதாகவும், இது நம்ப முடியாததாக இருக்கும் என்றும், இது மிகவும் உற்சாகமாக இருக்கிறது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
2002 இல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்திய அமெரிக்கா, அதன்பின் 2028 லொஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் போட்டியை நடத்தவிருக்கிறது.
அத்தோடு இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட சில போட்டிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










