சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு 13 புனித பெனடிக்ட் கல்லூரியின் தரம் 2 இல் கல்வி கற்கும் தினேஷ் ஹெதாவ் என்ற மாணவன் 50 மீற்றர் (Freestyle Swimming) நீச்சல் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார். 

07.08.2025 அன்றைய தினம் கல்லூரி நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற போட்டியில் 49 வினாடிகளில் 50 மீற்றர் தூரத்தைக் கடந்து, அவர் இச் சாதனையை படைத்துள்ளார். 

இதன் மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த சிறுவன் ஒருவரின், 1 நிமிடம் 6 வினாடிகள் என்ற முன்னைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். 

அத்தோடு, இச் சாதனையானது “சோழன் உலக சாதனைப் புத்தகம் (CBWR)” மூலம் உறுதிப்படுத்தப்பட்ட உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects