எதிர்வரும் 5 வருடங்களில் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பது தொடர்பில், அறிய உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
அவர்கள் நேற்று 13.11.2023 கொழும்பு – மாளிகாவத்தை சுகாதாரப் பிரிவிலும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நெரிசலான நகர்ப்புற சூழலில் சுகாதார சேவைகளை வழங்குவதில் தமது அனுபவங்களையும் அவர்கள் இதன்போது பகிர்ந்துகொண்டுள்ளனர்.
குறித்த குழுவில் சுகாதார நிபுணர்களுக்கு மேலதிகமாக பொருளாதார நிபுணர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇