சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் உஸ்மான் ஷின்வாரி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் ஷின்வாரி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

2013 முதல் 2019 வரை அவர் பாகிஸ்தானுக்காக ஒரு டெஸ்ட், 17 ஒருநாள் மற்றும் 16, 20க்கு 20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 

ஷின்வாரி ஆரம்பத்தில், 2013 டிசம்பரில், இலங்கைக்கு எதிரான 20க்கு 20 போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானார். 

2019 டிசம்பரில் இலங்கைக்கு எதிராக மீண்டும் ராவல்பிண்டியில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். 

அதுவே, அவர் பாகிஸ்தானுக்காக விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியாக அமைந்திருந்தது. 

ஒருநாள் போட்டிகளில் ஷின்வாரி தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

முதல் ஐந்து விக்கெட்டுகளை அவர் 21 பந்துகளுக்குள் வீழ்த்தினார் என தெரிவிக்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects