ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் நடுவர்களாக செயற்படவுள்ள 2 இலங்கை பெண்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உலக கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாகப் பெண் கிரிக்கெட் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்ளும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கையை சேர்ந்த 2 பெண்கள் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், மிஷேல் பெரேரா போட்டி நடுவராகவும், நிமாலி பெரேரா கள நடுவராகவும் செயற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், மிஷேல் பெரேரா பல ஆண்டுகளாக உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றிவரும் அனுபவம் வாய்ந்த போட்டி நடுவர் ஆவார்.

அத்துடன் நிமாலி பெரேரா இலங்கை மகளிர் கிரிக்கெட் நடுவர்களில் முக்கியமான ஒருவராக உள்ளார்.

மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடுவர் குழுவில் உறுப்பினராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects