இன்று (17) காலை ஏற்பட்ட மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மலையகத்துக்கான ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.
பதுளைக்கு செல்லும் இரவு தபால் ரயில் தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு செல்லும் போது மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்துள்ளது.
இதன் காரணமாக குறித்த மார்க்கத்தில் ரயில் சேவை தடை செய்யப்பட்டது.
ரயில் பராமரிப்புப் பணியாளர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மண்சரிவை அகற்றி ரயில் சேவைகளை வழமைக்கு கொண்டு வந்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇