எல்லா- வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மீட்புப் பணிக்கு வந்த இராணுவ விசேடப் படை சிப்பாயை கௌரவிக்கும் நிகழ்வு வெல்லவாயில் நடைபெற்றது.
அதன் பிரகாரம், காயமடைந்தவர்களை மீட்டவர் ஆன இராணுவ விசேட அதிரடிப் படையின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ. எம். வி. எம். பண்டார என்ற சிப்பாய்யானவரே கெரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பாராட்டு நிகழ்வு வெல்லவாய ஐக்கிய நலன்புரி சங்க உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வில் இராணுவ வீரரின் தாயார், மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி மற்றும் வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் டபிள்யூ. நிஹால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, இராணுவ வீரருக்கு நினைவுச் சின்னமும் பல பரிசுகளும் வழங்கப்பட்டன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










