இலத்திரனியல் அடையாள அட்டை விரைவில் அறிமுகமாகும் – டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு 24.09.2025 அன்று கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். 

அத்தோடு, இலத்திரனியல் அடையாள அட்டை, ஒரு நபரின் அடையாளத்தை சரிபார்ப்பதை எளிதாக்கும் என்றும் மரபணு தரவுகளைப் பாதுகாப்பாக சேமிக்கும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த திட்டத்தின் ஊடாக, அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆவணச் சான்றிதழின் தேவையும் குறைவடையும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இலத்திரனியல் அடையாள அட்டை அமுலுக்கு வந்ததன் பின்னர், நிகழ்நிலை மோசடிகள் கட்டுப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects