தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குவதும், பெறுவதும் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
பயணச்சீட்டு வழங்காத நடத்துநர்கள் மற்றும் பயணச் பயணச்சீட்டுகளைப் பெறாத பயணிகள் மீது சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பயணிகள் பேருந்துகளில் ஜிபிஎஸ் சாதனங்கள் பொருத்தப்படும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










