மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான ஜஸ்டினா முரளிதரனுக்கு சேவைநலன் பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும் 25.09.2025 அன்று புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடமாக மாவட்ட செயலாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் அரசாங்க அதிபரை மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், கிளை ரீதியான உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகளால் சேவை நலன் பாராட்டி பிரியாவிடை வழங்கப்பட்டது.
இதன் போது, மாவட்ட அரசாங்க அதிபருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அரசாங்க அதிபருடன் கடமையாற்றிய அனுபவ பகிர்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர்,
அரச நிதியோ அல்லது அரச சொத்துக்களை வீண்போகாது பாதுகாத்து மக்களுக்கான சேவையினை காலதாமதம் இன்றி நிறைவேற்ற வேண்டும் என்பதுடன் மாவட்டத்திலிருந்து வறுமையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










