மட்டக்களப்பில் இயங்கி வரும் அம்மா வீடு குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் தின நிகழ்வு 01-10-2025 அன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள அம்மா வீடு குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் நிலையப் பொறுப்பதிகாரியும் ஓய்வுபெற்ற தாதிய உத்தியோகத்தருமான உதயகுமாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக சிறுவர்கள் அழைத்து வரப்பட்டு சிறுவர் தின நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
நிகழ்வில் விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகர் வி.குகதாசன், Amcor நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ப.முரளிதரன், LIFT நிறுவன நிதிப்பணிப்பாளர் நடராஜா ஜெபராஜா, LIFT நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரன், நிலையத்தின் ஆலோசகரும் தாதிய உத்தியோகத்தருமான ஆஞ்சலா, குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள், LIFT நிறுவன உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்வில் சிறுவர்களின் நடனம், பெற்றோர்களின் அனுபவ பகிர்வு, அம்மா வீடு உத்தியோகத்தர்களின் நடனங்கள் அதிதிகளின் உரை எனப் பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









