பேருந்து பயண பற்றிச் சீட்டுக்கான பணம் செலுத்தும் செயன்முறையில் அறிமுகமாகும் புதிய மாற்றம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி முதல், டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில், பயணிகள் வங்கியால் வழங்கப்பட்ட டெபிட் (Debit) மற்றும் கிரெடிட் (Credit) அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களைச் செலுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (08.10.2025) அவர் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் தனியார் பேருந்து உரிமையாளர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டண முறையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த புதிய கட்டண முறை ஆரம்பத்தில் டிக்கெட் இயந்திரங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன் பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects