மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் விற்பனை சந்தையும், கண்காட்சியும் – 2025

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வானது 13.10.2025 அன்று பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகௌரி தரணிதரன் பங்குபற்றியிருந்தார்.

தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதுடன், நுகர்வோர்களிடமிருந்து வருகின்ற கேள்விகள் மற்றும் விற்பனை வாய்ப்புகளை சலுகை விலையில் மக்கள் கொள்வனவு செய்வதற்கு இக் கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது பிரதேச செயலக பிரிவிலிருந்து 20 இற்கும் மேற்பட்ட தொழில் முயற்சியாளர்கள் தங்களது உற்பத்தி மற்றும் கைவினை பொருட்களை காட்சிப்படுத்தியதுடன், விற்பனையும் செய்தனர்.

இந் நிகழ்வில் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகரத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் மற்றும் விற்பனையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects