இந்த வருடத்தில் டெங்கு நோயினால் இதுவரையான காலப்பகுதியில் 22 மரணங்கள் பதிவு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் 20.10.2025 என்று வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு இன்று (21.10.2025) கருத்து வௌியிட்ட அவர்,

கண்டறியப்பட்ட நோயாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அதிக ஆபத்துள்ள 11 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் என்றும் அவர் கூறினார். 

இதனிடையே குறித்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் 22 மரணங்களும் பதிவாகியுள்ளன. 

அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. 

எனவே, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை முடிந்தவரை அழித்து சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. 

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் வைத்தியர்களின் உரிய ஆலோசனையை பெறுமாறு பொதுமக்கள் அறிவறுத்தப்பட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects