களனிவெளி புகையிரத்தை பாதையை, அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரை நீடிக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் அடிப்படையில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது மற்றும் புகையிரத இணைப்பை வலுப்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.
சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான திட்டத்தைத் தயாரிக்க இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
2025 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இதன் ஆரம்பப் பணிகளுக்காக, ரூ. 250 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களுக்கு முன் நிறுத்தப்பட்ட பழைய புகையிரத பாதைக்கு இணையாகவே புதிய பாதை அமைக்கப்படவுள்ளது.
இந்த திருத்தப்பணி மூலம் கொழும்பு, அவிசாவளை மற்றும் இரத்தினபுரி இடையே நவீன இணைப்பை வழங்கி, சபரகமுவ பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










