மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் பே.சடாச்சரராஜாவின் தலைமையிலும், சிறைச்சாலை அத்தியட்சகர் ந.பிரபாகரனின் வழிகாட்டலிலும் சங்க உறுப்பினர்கள், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இணைந்து நடாத்திய 2025 ஆம் ஆண்டிற்கான தீபாவளி சிறப்பு நிகழ்வுகள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்றன.
இந்நிகழ்வில் சங்க உறுப்பினரும் ஓய்வுநிலை ஆசிரியர் மற்றும் சேவைக்கால ஆலோசகருமான யுவராஜனினால் “தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது” எனும் பொருள்பட சொற்பொழிவு ஆற்றப்பட்டதைத் தொடர்ந்து சிறைச்சாலை பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பூஜை இடம்பெற்றதுடன் அனைத்து கைதிகளுக்கும் சிற்றூண்டி வகைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கான அனுசரணையாக மனோகரன், மட்/ லயன்ஸ் கழகம் மற்றும் இந்து மகளிர் கழகத்தினர் ஆகியோர் செயற்பட்டமைக்காக அவர்களுக்கு பாராட்டுக்களும், நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










