இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த நாட்களில் ஏற்பட்ட வரட்சி காரணமாக 70 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.