இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 இலட்சத்து 78 ஆயிரத்து 557 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 420,033 ஆகும்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 174,021 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 132,594 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 115,938 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 111,998 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 93,104 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 84,606 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்திலிருந்து 55,444 சுற்றுலாப் பயணிகளும் , அமெரிக்காவிலிருந்து 51,862 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects