பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை முன்னிட்டு இம் மாதம் 7ஆம் திகதியுடன் நாடளாவியரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை இம் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு நாடளாவியரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து 2026 ஜனவரி முதலாம் திகதி புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும். தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

அத்துடன், பெப்ரவரி 14 முதல் மார்ச் 02 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3 ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இரண்டாம் தவணை ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. மூன்றாம் தவணையின் முதற்கட்டம் ஜூலை 27 முதல் ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஓகஸ்ட் 8 முதல் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects