உலகத் திரையரங்குகளில் இரசிகர்களைக் கவர்ந்து வரும் போடியார் திரைப்படம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஈழத்து வர்த்தக சினிமாவாக Visual Art Movies தயாரிப்பு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு கடந்த வருடம் இலங்கையில் வெளியாகி திரையரங்குகளில் ஒன்பது அரங்கு நிறைந்த காட்சிகளாக காண்பிக்கப்பட்ட ஓர் திரைப்படம் “போடியார்”.

வசூல் ரீதியாக வெற்றி பெற்ற ஓர் படைப்பாகத் தயாரிப்பு நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது வெளிநாடுகளிலும் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வர்த்தகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த 19-10-2025 அன்று கனடா – ஒன்டாரியோ மாகாணத்தில் அல்பியன் திரையரங்கிலும், 02-11-2025 அன்று சுவிட்சர்லாந்து – பேர்ண் நகரில் சொல்துன் கினோ ரெக்ஸ் திரையரங்கிலும் வெளியிடப்பட்டு பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Universal Mind Rising Foundation (UMRF) எனப்படும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் உலக அளவில் பல நாடுகளில் இத்திரைப்படம் வெளிடப்பட உள்ளதாகவும் அதன் அடுத்த கட்டமாக எதிர்வரும் 09-11-2025 அன்று சுவிட்சர்லாந்து அரோவ் நகரில் மூன்று காட்சிகளும், இவ்வருட இறுதிக்குள் கனடாவிலும், அவுஸ்திரேலியாவிலும், சுவிட்சர்லாந்து ஜெனிவா நகரிலும் மேலும் பல திரையிடல்களும் திட்டமிடப்பட்டுள்ளதாக UMRF நிறுவனத்தின் ஸ்தாபகரும், தலைவருமான லோகானன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு படுவாங்கரை வாழ்வியலை மையப்படுத்திய கதையையும், சிறந்த பாடல்களையும் கொண்ட போடியார் திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் என்பவற்றை விஷுவல் ஆர்ட் மூவீஸ் நிறுவன உரிமையாளர் முரளிதரன் எழுத, குறுந்திரைச் செம்மல் கோடீஸ்வரன் இயக்கியுள்ளதுடன் வைத்தியர் அருளானந்தம், விரிவுரையாளர் சதா சண்முகநாதன் மற்றும் முரளிதரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects