இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரில் ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது .

அதன் அடிப்படையில், இந்திய அணி வீராங்கனைகள் உலகக் கோப்பையுடன் 05.11.2025 அன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் 02.11.2025 அன்று இறுதிப் போட்டியில் விளையாடின.

இப் போட்டியில் 52 ஓட்டங்களில் வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் முதல் முறையாக உலகக் கிண்ணத்தை வென்றது இந்திய மகளிர் அணி. இந்த வெற்றியை தேசமே கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், இந்திய அணி வீராங்கனைகள், தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார், பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் ஆகியோர் 05.11.2025 அன்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தனர்.

இந்திய அணியினருடன் இறுதிப் போட்டி குறித்து பிரதமர் மோடி உரையாடி உள்ள. ஹர்மன்பிரீத் மற்றும் அமன்ஜோத் கவுர் பிடித்த கேட்ச் குறித்து பிரதமர் மோடி, இந்திய மகளிர் அணியினருடன் உரையாடியதாக தகவல்.

குறித்த சந்திப்பின் போது பிரதமர் மோடிக்கு ‘நமோ’ என பெயருடன் கூடிய இந்திய அணியின் ஜெர்ஸியை வீராங்கனைகள் வழங்கினர். அதில் அணியினர் அனைவரும் கையொப்பமிட்டு இருந்தனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects