Action Unity Lanka நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் காலநிலை மீள்தகைமை தொடர்பான திட்ட நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தினால் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியுசிலாந்து நாட்டின் வெளிநாட்டு விவகார, வர்த்தக அமைச்சு மற்றும் Childfund New Zealand நிதி அனுசரணையில் அமுலாக்கப்பட்டிருக்கும் Community-Led Climate Adaptation for Island Resilience (CCAIR) (காலநிலை மாற்றத்திற்கு இயைவாக்கம் அடையக்கூடிய சமூகமொன்றினை உருவாக்குதல்) திட்டதின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு நிகழ்வானது அக்சன் யுனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் க.கஜன் தலைமையில் Childfund New Zealand நிறுவன திட்ட முகாமையாளர் Matt Fwoller மற்றும் Childfund Sri Lanka நிறுவனத்தின் சிரேஸ்ட முகாமையாளர் ஏ.அர்ச்சுதன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பாசிக்குடாவில் உள்ள தனியார் விடுதியில் 18.11.2025 அன்று நடைபெற்றது.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவினுள் உள்ள குடும்பிமலை, முறுத்தானை மற்றும் பேரில்லாவெளி போன்ற தெரிவு செய்யப்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் நிலைபேறான நீர் மற்றும் உணவு தொடர்பாகவும் காலநிலை மாற்றத்திற்கு இயைவாக்கம் அடைவதற்கு திறன்களை விருத்தி செய்வதற்காகவும் விஷேட பயிற்சிகள் சமூகமட்ட அங்கத்தவர்களுக்கும் அரசாங்க பங்குதாரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன் புளியடிக்குளம், மாவட்டவான்குளம், பிறைசூடிக் குளம் மற்றும் சின்ன முறுத்தானை கால்வாய் என்பனவும் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் நான்கு சமூக மட்ட குடிநீர் வழங்கல் திட்டம் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளதுடன் இருபத்தியிரண்டு இளம் விவசாயிகளுக்கு காலநிலைமாற்றத்திற்கு இயைவாக்கம் அடையக்கூடிய விவசாயம் தொடர்பான தொழிநுட்ப முறையிலான விவசாய பயிற்சிகளும் மாவட்ட விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்டு மாதிரிப் பண்ணைகளை உருவாக்குவதற்காக பெறுமதி வாய்ந்த உள்ளீடுகளும் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, கமநல சேவைகள் பிரதி ஆணையாளர் கே. ஜெகன்நாத், திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் சுகுணதாஸ், கிரான் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சிவனேசராஜா, வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் ராஜ்கீதன், குடும்பமலை இராணுவ அதிகாரி பிரிகேடியர் T.D.K.தர்மசேன, சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சுலக்சன் மற்றும் ஏனைய பல அரசாங்க அதிகாரிகளும், சமூக மட்டத்திலுள்ள இத்திட்டத்தின் பயனாளிகளும் கலந்துகொண்டதோடு அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் சார்பாக நிகழ்சி திட்ட முகாமையாளர் ஞா.சுரேஸ், CCAIR திட்டத்தின் களமுகாமையாளர் ச.சக்தீஸ்வரன், ஏனைய முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

AU Lanka நிறுவனமானது கடந்த 12 வருடங்களுக்கு மேலாக இளைஞர்கள், சிறுவர்களின் நலன் மற்றும் வறிய குடும்பங்களின் தொழில் வாண்மை விருத்தி போன்ற பல்வேறுபட்ட சமூகம் சார் செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects