கோறளைப்பற்று மத்தி , பிரதேச செயலகப் பிரிவில் இவ்வாண்டுக்கான கலை இலக்கிய விழாவினை நடத்துதல் தொடர்பான கலந்துரையாடல் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் செயலக கேட்போர் கூடத்தில் 20.11.2023 அன்று இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலப்பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள கலை மன்றங்களின் உறுப்பினர்கள், பிரதேச கலாசாரப் பேரவை மற்றும் அதிகார சபை உறுப்பினர்கள், துறை சார் கலைஞர்கள் உட்பட கலாசார உத்தியோகத்தர்கள், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வருடத்துக்கான கலை இலக்கிய விழாவினை திறந்த வெளி நிகழ்வாக நடத்துதல், கலை மன்றங்களை மீள் பதிவு செய்தல், இவ்வருட விழாவிற்கு கலை மன்றங்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளுதல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் இதன் போது விரிவாக ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇