உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சாதனை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரலாற்றில் அதிகூடிய வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. 

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் றுக்தேவி. பீ.சீ. பெர்னாண்டோ அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த அறிக்கையின் பிரகாரம்,  

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவு அதிகப்படியான வரி வருமானம் 2025 ஆம் ஆண்டுக்காக 17.11.2025 அன்று ஈட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த மொத்த வரி வருமானம் ரூபா 2,002,241 மில்லியன் (ரூபா 2,002.241 பில்லியன்) ஆகும். 

இது 2024 ஆம் ஆண்டின் மொத்த வரி வருமானத்துடன் ஒப்பிடும்போது ரூபா 60,079 மில்லியன் அதிகமாகும். 

மேலும், 2024 ஆம் ஆண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட ரூபா 1,942,162 மில்லியன் வரி வருமானத்துடன் ஒப்பிடும்போது, 2025.11.17 ஆம் திகதியளவில் வரி வருமானம் ரூபா 2,002,241 மில்லியன் வரை அதிகரித்துள்ளது. 

இதன்மூலம் அரசு நிதி நிலையினை பலமாக முன்னெடுப்பதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதியுயர்ந்த பங்களிப்பினை வழங்கியுள்ளது. 

நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைய நம்பிக்கையாக மற்றும் நாட்டின் பொது மக்களின் சுபீட்சத்திற்காக வரி செலுத்தியவர்களுக்கும், அதற்காக கூட்டுறவுடன் ஒத்துழைப்பினை வழங்கிய அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects