இந்திய கடற்படைக்கு சொந்தமான INS SUKANYA கப்பல் உத்தியோகபூர்வ பயணமாக 18.11.2025 அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை வரவேற்றனர்.
101 மீற்றர் நீளம் கொண்ட INS SUKANYA கப்பலின் கட்டளை தளபதியாக கொமாண்டர் சந்தோஷ் குமார் வர்மா செயற்படுகின்றார்.
இக் போர் கப்பல் தீவில் தங்கியிருக்கும் காலத்தில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கப்பலின் அங்கத்துவ குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
மேலும், நாட்டின் பல முக்கிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிடவும் திட்டமிடப்பட்டது.
அத்தோடு, உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, ‘INS SUKANYA’ எனும் போர் கப்பள் (21.11.2025) நாளை நாட்டில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









