பொதுநலவாய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் 09 பதக்கங்களை தனதாக்கிக் கொண்ட இலங்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மலேசியாவில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணி 09 பதக்கங்களை வென்றுள்ளது.

அதற்கமைய, 03 தங்கப் பதக்கங்கள், 04 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வென்ற குறித்த அணி 17.11.2025 அன்று மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-319 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இப் போட்டி இம் மாதம் 09 முதல் 16 ஆம் திகதி வரை மலேசியாவின் கோலாலம்பூரில் 19 பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் உயர் அதிகாரிகள், வீரர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவர்களை வரவேற்றுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects