அனைத்துப் பேருந்துகளும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அடிப்படை வீதித் தகுதிச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்படும் எனப் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாகும்புர பல்நிலை போக்குவரத்து நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்தோடு வீதித் தகுதிப் பரிசோதனை ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு பேருந்தும் அதிகாரப்பூர்வச் சான்றிதழைப் பெற வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
மேலும் சான்றளிக்கப்பட்ட சோதனை மையங்களில் பேருந்துகளை பரிசோதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










