சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு மருத்துவப் பராமரிப்பு திட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சீரற்ற வானிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுடன் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள விலங்குகளுக்கு மருத்துவப் பராமரிப்பு, அதிலும் குறிப்பாக வெறிநாய் தடுப்பூசிகளை (rabies vaccinations) வழங்குவதற்காக விலங்கு நலக் குழு (Animal Welfare Committee – AWC) ஏழு நாள் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

அதன் அடிப்படையில், AWC ஆனது விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு அமைச்சினால் விலங்கு நல அமைப்புகளுடன் இணைந்து இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது,

இந்த திட்டத்தின் மூலம், நடமாடும் கால்நடை மருத்துவக் குழுக்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும், தற்காலிக முகாம்களுக்கும் சென்று உதவி தேவைப்படும் விலங்குகளைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கின்றனர்.

இந்த மனிதாபிமான முயற்சிக்கு Vets for Future, Baw Baw Animal Welfare, மற்றும் Help a Dog ஆகிய அமைப்புகள் நிதியுதவி அளிக்கின்றன.

இதுவரை சிகிச்சை பெற்ற விலங்குகளில் சுமார் 30% நாய்கள் மற்றும் பூனைகள் அடங்குவதாகவும், இவற்றை அவற்றின் உரிமையாளர்களே பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து வந்துள்ளனர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீட்பு காலப்பகுதியில் இடம்பெயர்ந்த விலங்குகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதும், வெறிநாய் நோய் போன்ற நோய்கள் பரவுவதைத் தடுப்பதும் இம்முயற்சியின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது,

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects