பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதியில் காணப்படும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு மேலதிக புகையிரத சேவை ஒன்றை ஈடுபடுத்த புகையிரதத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அதன் பிரகாரம் , இன்று (24.12.2025) பிற்பகல் 3.00 மணிக்கு மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி விசேட கடுகதி ரயில் ஒன்று பயணிக்கவுள்ளது.

விசேட புகையிரத சேவை இம்மாதம் 29 ஆம் திகதி காலை 5.00 மணிக்கு மாத்தறை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்டு, காலை 8.30 மணிக்குக் கொழும்பு கோட்டையை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை நகரங்களுக்கிடையிலான புகையிரத சேவை இம் மாதம் 25 மற்றும் 28 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இப்புகையிரதம் 9 முதலாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளைக் கொண்டதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects