“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு புதிய கோட்டை முனை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் 26.12.2025 அன்று இரத்த தான நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது.
அதன் அடிப்படையில், மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள ஆரம்ப மருத்துவ சிகிச்சைப்பிரிவில் (கல்லடி திருச்செந்தூர் 01 ஆவது சுனாமி நினைவுத் தூபிக்கு அருகாமையில்) காலை 7.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.
குறித்த இரத்த தான நிகழ்வானது சுனாமி பேரலையில் உயிர் நீத்த உறவுகளின் 21 ஆவது நினைவை முன்னிட்டு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










