டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக மூடப்பட்ட யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான நக்கிள்ஸ் காட்டுப் பகுதியில் உள்ள ரிவர்ஸ்டன் சுற்றுலா வலயம் 01.02.2026 அன்று உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகள் பார்வை இடுவதற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், குறித்தப் பகுதிக்கு செல்லும் ரத்தோட்டத்தியில் இருந்து லக்கலை வரை சேதமடைந்த வீதிகள் இரண்டு மாதங்களுக்குள் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த வீதிகளில் இலகுரக வாகனங்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன.
அத்துடன், பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனால் சுற்றுலாப் பயணிகள் ரிவர்ஸ்டன் சுற்றுலாத்தலம் பாதுகாப்பாக பார்வையிட செல்ல முடியும்.
சுற்றுலா பயணிகள் பொறுப்புடன் வாகனம் ஓட்டவும், உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், சூழலைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










