இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் மாத்திரம் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த 4 மாதங்களில் 2,064 பேர் தென் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, உற்பத்தித் துறை தொடர்பான வேலைகளுக்காக 1708 பேரும், மீன்பிடித் துறைக்கு 351 பேரும், கட்டுமானத் துறைக்கு 5 பேரும் தென்கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.
இவர்களில் 1,892 பேர் முதல் முறையாக தென் கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் 41 யுவதிகளும் தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇