பாடசாலைகளுக்கு இடையிலான அகில இலங்கை மல்யுத்த விளையாட்டுப் போட்டியில் விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகளான தே.தர்மி மற்றும் வா.கனிக்கா ஆகியோர் தங்கப்பதக்கத்தினை வென்று மீண்டும் அகில இலங்கை ரீதியாக வெற்றிபெற்றுள்ளனர்.
அத்தோடு இவ்விரு மாணவிகள் கடந்த வருடமும் முறையே 18/20 வயதூபி பிரிவின் கீழ் போட்டியிட்டு பதக்கங்களை வென்றிருந்தனர்.
அதுமட்டுமல்லாமல் அகில இலங்கை மல்யுத்த வீராங்கனையாக செல்வி தே.தர்மி தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
மேலும் 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான மல்யுத்தப்போட்டியில் அகில இலங்கை ரீதியாக விவேகானந்தா மகளிர் கல்லூரி 02ஆம் இடத்தினை கைப்பற்றி அதற்கான கிண்ணத்தினை சுவீகரித்துக் கொண்டது .
இம்மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை வரவேற்கும் நிகழ்வில் கல்லூரி அதிபர், கல்லூரி நிர்வாகத்தினர், சிவானந்தா தேசிய பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினருடன் விவேகானந்தா பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினரும் கலந்துகொண்டனர்.
மேலும் , விவேகானந்தா பழைய மாணவர் சங்கம் சார்பாக மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பினை அளித்ததுடன் பயிற்றுனர் வே திருச்செல்வத்திற்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர்.
இம்மாணவர்களை போட்டிக்கு தயார் படுத்திய வே திருச்செல்வம் அவர்களின் திறமையினை மழுங்கடிக்க விடாமல் அக்கறையுடன் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










