மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவினை மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் மூலம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் கா.சித்திரவேல், உதவிப்பிரதேச செயலாளர் சோ.யோகராஜா உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் உறுப்பினர்களுக்கும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் சி.மாமாங்கராஜா அவர்களின் தலைமையில் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட முறுக்கன் தீவு , பிரம்படித்தீவி, சாராவெளி, அம்பேஸ்குடா கிராம மக்களுக்கு 400 மதிய உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் தேசபந்து மு.செல்வராஜா அவர்களின் அனுசரணையில் வெள்ளத்தினால் வாழ்வாதார இடர்நிலைக்கு உட்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலையில் தற்காலிகமாக தங்கியுள்ள மக்களுக்குகிராம உத்தியோகத்தர் ஊடக படகின் மூலம் குறித்த உணவு பொதிகள்அனுப்பிவைக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் தேசபந்து மு.செல்வராஜா அவர்களுக்கும் , பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் இந் நிகழ்வில் கலந்து பங்காற்றிய மட்டக்களப்பு மாவட்ட சிவில்சமூக அமைப்பின் உறுப்பினர்களுக்கும் பிரதேச மக்கள் தமது நன்றியை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇