மட்டக்களப்பு “93 நண்பர்கள்” எனும் அமைப்பினால் மட்/மே /நாற்பது வட்டை விபுலானந்தா வித்தியாலயத்தில் நடமாடும் மருத்துவ முகாம் ஒன்று 11-09-2024 அன்று நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலுடனும், மகிழடித்தீவு ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் உதவியுடனும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், பாடசாலை அதிபர், மற்றும் ஆசிரியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள் ஆகியோரின் பங்களிப்புடனும் இவ் வைத்திய முகாம் நடைபெற்றது.
பாடசாலை மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், சமூகத்தினர் எனப் பெருமலவானோர் இம்மருத்துவ முகாமினால் பயனடைந்தனர்.
இதன்போது பல் மருத்துவம், பொதுச் சுகாதார பரிசோதனை, மாணவர்களுக்கான விழிப்பூட்டல், சத்துமா வழங்குதல், மருத்துவ ஆலோசனைகள், இனங்கானப்பட்ட நோய்களுக்கான மருந்துகள் போன்றவை வழங்கப்பட்டதுடன் இனங்கானப்பட்ட நோய்களுக்கு மேலதிக சிகிச்சைக்காக மகிழத்தீவு ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைக்கு செல்வதற்கான ஆலோசனைகளும், பரிந்துரைகளும் வைத்தியர்களால் வழங்கப்பட்டன.
மட்க்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, புனித மிக்கேல் கல்லூரி, சிவாநந்தா வித்தியாலயம் ஆகியவற்றில் 1993 ஆம் ஆண்டு உயர்தரம் படித்த மாணவர்களின் தன்னார்வ தொண்டு அமைப்பான “93 நண்பர்கள்” எனும் அமைப்பினால் கொரோனா காலங்களிலும், அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலமைகளிலும் பல்வேறு மனிதாபிமான உதவி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇