வட்டார உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

எதிர்வரும் உள்ளூர் அதிகார சபை தேர்தல் கடமைகளில் கடமையாற்றவுள்ள வட்டார உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எ.எம்.சுபியானின் தலைமையில் ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (28.04.2025) இடம் பெற்றது.

இதன் போது வட்டார உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக தெளிவூட்டப்பட்டதுடன் அதிகாரிகளின் ஐய வினாக்களுக்கான விளக்கங்களும் வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் வட்டார உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களினால் 144 வட்டாரங்கள் மேற்பார்வை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects