2026 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் இலங்கை பொருளாதார வளர்ச்சி குறித்து தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.1% ஆக சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, 2026 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான உற்பத்தி அணுகுமுறையின் கீழ் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் ஏனைய சுட்டிப் பொருளாதார குறிகாட்டிகள் மதிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. 

கடந்த 2025ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் நிலையான விலை (2015) அடிப்படையில் 3,476,664 மில்லியன் ரூபாவாகப் பதிவாகியிருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2026ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் 3,652,503 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. 

குறித்த காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் பிரதான மூன்று துறைகளான விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் ஆகிய அனைத்துத் துறைகளும் சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. 

இதன்படி, விவசாயப் பொருளாதார நடவடிக்கைகள் 1.1% ஆகவும், கைத்தொழில் துறை 7.2% ஆகவும் மற்றும் சேவைத் துறை 3.4% ஆகவும் வளர்ச்சியடைந்துள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects