ஏறாவூர் நகர பிரதேச செயலகம் கலாசார அதிகார சபை மற்றும் கலாசாரப் பேரவை ஆகியன இணைந்து நடாத்தும் ஏறாவூர் பிரதே கலை இலக்கிய விழாவும் “இனசமதி” சிறப்பு மலர் வெளியீடும்ன் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் தலைமையில் ஏறாவூர் நகர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் (23.01.2024) அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜே.ஜே.முரளிதரன் கலந்துகொண்டதுடன் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சீ.அகமட் அப்கர், பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஜாஹிதா ஹலால்தீன், பிரதேச கலைஞர்கள், கல்வி அதிகாரிகள், பிரதேச செயலக உயரதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
கலைஞர்களையும் கலைஞர்களின் படைப்புக்களையும் கௌரவிக்கும் முகமாக வருடாந்தம் நிகழ்த்தப்படும் கலை இலக்கிய விழாவில் இம் முறை ஐந்தாவது தடவையாக “இனசமதி” சிறப்பு மலர் வெளியீடு வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், இதன் முதல் பிரதி மாவட்ட அரசாங்க அதிபரிடம் பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது மாணவர்கள் மற்றும் கலைஞர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், கலைஞர் கௌரவிப்பும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇